வரலாற்றில் முதல்முறை இந்தியர்கள் இல்லாது நடைபெற்ற கச்சத்தீவு அந்தோனியார் திருவிழா!

0
180

யாழ்ப்பாணம், நெடுந்தீவு – கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் திருவிழா நேற்று (23) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

கொடியேற்றத்தை அடுத்து சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெற்றன. திருப்பலி நிகழ்வு இன்று (24) காலை ஒப்புக்கொடுக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறவுள்ளது.

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்

ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கெடுப்பு

கச்சதீவு திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஆயிரக் கணக்கான பக்தர்கள் யாழ்ப்பாணம் குறிகட்டுவானிலிருந்தும், மன்னாரிலிருந்தும் நேற்று கச்சதீவை சென்றடைந்தனர்.

போக்குவரத்து, சுகாதார வசதி

இத்திருவிழாவில் பக்தர்களின் நலன் கருதி சுகாதார வசதிகள் போக்குவரத்து ஒழுங்குகள், உணவு வசதிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்திய பக்தர்கள் இல்லை

இம்முறை கச்சதீவு திருவிழாவில் இந்திய பக்தர்கள் கலந்து கொள்ளவில்லை. இந்திய மீனவர்களுக்கு இலங்கையில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கச்சதீவு திருவிழாவைப் புறக்கணிக்க தமிழகம் – இராமேஸ்வரம் மீனவர்கள் தீர்மானித்துள்ளனர்.