விண்வெளியில் பயணம் செய்ய விருப்பம்; பிரித்தானியாவில் பிரபலமான சிறுவன்!

0
83

பிரித்தானியாவின் நார்தாம்ப்டன் பகுதியை சேர்ந்த ஆஸ்டன் (Aston) எனும் சிறுவன் விண்வெளியில் பயணிக்க வேண்டும் என்பதே என் விரும்பம் என தெரிவித்துள்ளார்.

நரம்பியல் பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கு உதவுவதற்காக “திங்க்ஸ் அபவுட் ஸ்பேஸ்” (Things About Space) எனும் புத்தகத்தை தனது 8-வது வயதில் எழுதி, படிப்பதற்கு சிரமம் உள்ளவர்களுக்கு அதன் ஒலி பதிப்பையும் வெளியிட்டு ஆஸ்டன் என்ற சிறுவன் புகழ் பெற்றான்.

சிறுவன் ஆஸ்டன் எழுதிய புத்தகம் 700 பிரதிகளுக்கும் மேல் விற்று தீர்ந்தது. தற்போது 11-வயது ஆகும் ஆஸ்டன் எழுதிய புத்தகத்தின் விற்பனை மூலம் கிடைத்த தொகையில் 1000 யூரோக்களை பிரித்தானியா வானியல் நிறுவனத்திற்கு நன்கொடையாக ஆஸ்டனின் பெற்றோர் அளித்துள்ளனர்.

ஆஸ்டன் முதலில் எழுதிய பதிப்புகள் அனைத்தும் விற்று தீர்ந்ததால் கடந்த ஆண்டு அதன் 2வது பதிப்பை மீண்டும் வெளியிட வேண்டியிருந்தது.

“பல நண்பர்கள் அந்த புத்தகத்தைப் பற்றி கேட்டது எனக்கு மிகவும் பிடித்தமாக இருந்தது. புத்தகம் எழுதி வெளியிடுவது எப்படி என கேட்பவர்களுக்கு நான் சொல்வது மனது வைத்தால் யாராலும் இதை செய்ய முடியும் என்பதுதான்.

என்றாவது ஒரு நாள் எதிர்காலத்தில் விண்வெளியில் பயணம் செய்ய வேண்டும் என்பதே என் விருப்பம்” என்று ஆஸ்டன் வானொலி வானொலி பேட்டியில் கூறினார். “ஆஸ்டனை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று ஆஸ்டனின் தாயார் கூறினார்.