கோவிட் தடுப்பு மருந்துகளின் பக்கவிளைவு!விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தல்

0
78

கோவிட்டிற்கு எதிரான சில தடுப்பு மருந்துகளால் பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்ற அண்மைய கண்டுபிடிப்பை அடுத்து, இலங்கையில் உள்ள மருத்துவ வல்லுநர்கள், விழிப்புடன் இருக்குமாறு சுகாதார அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளனர். 

உலக சுகாதார அமைப்பின் ஆராய்ச்சிப் பிரிவான குளோபல் வக்சின் டேரா நெற்வேக் (Global Vaccine Data Network) இன் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் ஃபைசர், மொடர்னா மற்றும் அஸ்ட்ராசெனெகா போன்ற நிறுவனங்களால் கண்டுபிடிக்கப்பட்ட கோவிட் தடுப்பூசிகள் இதயம், மூளை போன்றவற்றில் அரிதான பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது.

மருத்துவ அதிகாரி

எட்டு நாடுகளில் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட 99 மில்லியன் மக்களை இலக்காக கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இந்த ஆபத்து கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க, ஆய்வின் கண்டுபிடிப்புகளின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு இலங்கை விழிப்புடன் இருப்பது நல்லது என்று கூறியுள்ளார்.

எனினும், ஆய்வின் முடிவுகள், இலங்கைக்கு நேரடியாகப் பயன்படுத்தப்பட முடியாது என்று தெரிவித்துள்ள சமில் விஜேசிங்க, ஆய்வு மேற்கொள்ளப்பட்ட தரவு இலங்கை சூழலில் இருந்து வேறுபட்டது என்பதே இதற்கான காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.