3 வயதில் இருந்து நாய்களுடன் வளர்ந்ததால் நாய் போல் நடந்து கொள்ளும் பெண்!

0
98

காட்டில் விலங்குகள் மத்தியில் வளர்ந்த மனிதர்களைப் பற்றிய கதைகளை நாம் கேள்விப்பட்டுள்ளோம். அனைத்திற்கும் மேலாக மேலாக சில விலங்குகள் குழந்தைகளை வளர்க்கும் இதனால் அந்த பிள்ளைகள் விலங்குகளைப் போலவே நடந்து கொள்ளும் சம்பவங்களும் நடந்துள்ளன.

இவ்வாறான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட டார்சன் மற்றும் மௌக்லி போன்ற திரைப்படங்கள் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன.

சிறு வயது முதல் நாய்க்கூண்டில் நாய்களுடன் வாழ்க்கை

விலங்குகளை போல் நடந்துக்கொள்ளும் மனிதர்களை நிஜ வாழ்க்கையில் காண்பது அரிது. எனினும் உக்ரைனை சேர்ந்த 44 வயதான ஒக்ஸானா மலாயா என்ற பெண் சிறிய வயதில் இருந்து நாய்களுக்கு மத்தியில் வளர்ந்ததால், நாய்களை போலவே நடந்துக்கொள்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

நாய்களை போல் சாப்பிடுவது, குரைப்பது என நாய்களை போல் இந்த பெண் நடந்துக் கொண்டுள்ளார். மலாயாவின் பெற்றோர் விவசாய பண்ணையில் அடிமைகளாக வேலை செய்து வந்ததால், அவர்கள் தமது பிள்ளையை சரியாக பராமரிக்கவில்லை.

மூன்று வயதில் இருந்து மது பிரியர்களானா பெற்றோரின் அன்பும், அரணைப்பும் கிடைக்காத காரணத்தினால், தான் விரும்பியடி வாழ்ந்து வந்துள்ளார்.

ஒரு நாள் பெற்றோர் மதுபோதையில் இருந்த போது சிறுமியை கடும் குளிரில் வெளியில் விட்டு,விட்டு வீட்டின் கதவை மூடியுள்ளனர்.

குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த சிறுமி என்ன செய்வதென்று அறியாது, வீட்டுக்கு அருகில் வளர்ப்பு நாய்களின் கூண்டுக்குள் சென்று படுத்து உறங்கியுள்ளார். நாய்களுடன் விளையாடுவது,சாப்பிடுவது படுத்து உறங்குவது என தொடர்ந்தும் நாய்களுடனேயே இருந்து வளர்ந்துள்ளார்.

தமது பிள்ளைக்கு என்ன நடந்தது என்பதை பெற்றோர் தேடாது அப்படியே கைவிட்டுள்ளனர். குறைந்தது பிள்ளை என்ன சாப்பிட்டது என்பதை கூட இவர்கள் கேட்டறிவதில்லை.

வயது வந்த பெண்ணான பின்னரும் மாறாத பழக்கம்

சில காலத்திற்கு பின்னர் சிறுமிக்கு 9 வயது இருக்கும் பெற்றோர் பிரிந்து சென்றனர். இதனால் சிறுமி நாய்களுடனேயே வளர்ந்து வந்துள்ளதுடன் நாய்கள் அந்த சிறுமிக்கு உற்ற தோழனாக மாறியுள்ளன. நாளடைவில் இந்த சிறுமி வயது வந்த பெண்ணாக மாறிய போதிலும் நாய்களை போலவே நடந்துக்கொண்டார்.

இதனை கவனித்த அருகில் உள்ள வீடுகளில் இருப்பவர்கள் பெண்ணை நாயின் கூண்டிலில் இருந்து வெளியில் எடுக்க முயற்சித்துள்ளனர். எனினும் அருகில் இருந்த நாய்கள் அதற்கு இடமளிக்கவில்லை. பெண்ணிடம் பேசிய போது அந்த பெண் நாய்களை போல் குரைத்து பதிலளித்துள்ளார்.

தம்மால் பெண்ணை மீட்க முடியாது என அறிந்த அயல் வீட்டினர், அரச அதிகாரிகளை தொடர்புக்கொண்டு அறிவித்துள்ளனர். அங்கு சென்ற அதிகாரிகள் பெண்ணை மீட்க முயற்சித்த போதிலும் நாய்கள் அவர்களை விடவில்லை.

இதனையடுத்து நாய்களுக்கு உணவை கொடுத்து அவற்றின் கவனத்தை திசைத்திருப்பி, பெண்ணை மீட்டு,காப்பகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

பயிற்சிகளுக்கு பின்னர் சாதாரண மனிதர்களை போல் மாறினார்

அங்கு அந்த பெண்ணுக்கு கால்களில் நடக்கவும் ஏனையோருடன் உரையாடி தொடர்புக்கொள்ளவும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. எனினும் நாய்களுடன் வளர்ந்த காரணத்தினால், அந்த பெண், நாய்களின் பண்புகளை மறக்கவில்லை.

பெண்ணின் மனநிலையானது ஆறு வயதான குழந்தையை போல் இருப்பதாகவும் ஐந்து வயதுக்குள் பேசும் மொழியை கற்கவில்லை என்பதால் படிப்பதும் சிரமமாக மாறியுள்ளது. இந்த நிலையில் ஏனைய மனிதர்களை போல தற்போது இரண்டு கால்களில் நடப்பது உட்பட அனைத்தையும் பழகிக்கொண்டுள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில், மலாயா கடந்த 2000 ஆம் ஆண்டு தனது 21வது வயதில் பெற்றோரை சந்தித்துள்ளதுடன் தன்னை பராமரிக்காது, கவனக்குறைவாக இருந்த பெற்றோரை அந்த பெண் நினைவில் வைத்திருந்தார்.

இதனால், அந்த பெண் மீண்டும் பெற்றோருடன் இணைய முடிந்துள்ளது. மலாயா என்ற இந்த பெண் தொடர்பான சம்பவம் மிக அரிதான சம்பவங்களில் ஒன்று.