தமிழர்களின் பிரபலமான உணவு ஒன்றை சமைத்த பிரித்தானிய சமையல் கலைஞர்!

0
80

பிரித்தானிய நாட்டை சேர்ந்த சமையல் கலைஞரான ஜேக் ட்ரையன் என்பவர் தமிழகத்தின் பிரபலமான உணவு வகைகளில் ஒன்றான பொரியலை சமைக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் ‘ட்ரையன் கிரீன் பீன் பொரியல்’ என்ற தலைப்பில் அவர் பாரம்பரிய உணவு வகையான பொரியலை தயாரிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. குறித்த காணொளியில் ட்ரையன் தனது பார்வையாளர்களை அன்புடன் வணக்கம் என வாழ்த்து சொல்லி தொடங்குகிறார்.

பின்னர் கறிவேப்பிலை, துருவிய தேங்காய், பருப்பு, வதக்கிய காய்கறிகள் ஆகியவற்றை சேர்த்து பொரியலை தயாரிக்கும் காட்சிகள் பயனர்களை ரசிக்க செய்கிறது. இந்த காணொளி வைரலாகி 18 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ளது.