ரூ6,500 கோடி சொத்து மதிப்பு, ரூ 70 கோடியில் சொகுசு வீடு! இவர் யார் தெரியுமா

0
107

எந்த நிறுவனத்திற்கும் முதலாளியாக இல்லாமல் பெருநிறுவன நிர்வாகத்தில் உச்சத்தில் இருப்பவர் இக்னேஷியஸ் நவில் நோரோன்ஹா என்பவர்.

திட்டமிடும் புத்திசாலித்தனம்

DMart நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டுவரும் Ignatius Navil Noronha இந்தியாவில் எந்த நிறுவனத்திற்கும் முதலாளியாக இல்லாமல் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவராக தனித்து நிற்கிறார்.

DMart நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க வெற்றியில் அவரது தலைமைப் பண்பு மற்றும் திட்டமிடும் புத்திசாலித்தனம் உள்ளிட்டவை முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவராக அடையாளப்படுத்தப்பட்டாலும், தம்மை ஒரு சாதாரண நபராகவே காட்டிக்கொள்கிறார்.

கலை, அறிவியல் பட்டம், வணிகவியல் மற்றும் மேலாண்மை பட்டதாரியான நவில் நோரோன்ஹாவின் DMart பயணம் என்பது அவரது இளம் வயதிலேயே தொடங்கியுள்ளது.

DMart நிறுவனத்தின் Radhakishan Damani என்பவரால் வேலைக்கு அமர்த்தப்பட்ட நவில் நோரோன்ஹா குறுகிய காலத்தில் தமது தனித்துவத்தை நிரூபித்துள்ளார். ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தில் 8 ஆண்டுகள் விற்பனை அதிகாரியாக பணிபுரிந்து மதிப்புமிக்க அனுபவத்தைப் பெற்றுள்ளார்.

DMart நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வந்தாலும், அதன் தாய் நிறுவனமான Avenue Supermarts Limited-ன் வளர்ச்சிக்காகவும் திட்டங்கள் தீட்டி வருகிறார்.

பெரும் சொத்து மதிப்புக்கு காரணம்

ஊடக வெளிச்சத்தில் இருந்து எப்போதும் ஒதுங்கியே இருக்கும் நவில் நோரோன்ஹா மும்பை மாநகரின் பாந்த்ரா கிழக்கு பகுதியில் ரூ 70 கோடிக்கு சொகுசு வீடு ஒன்று வாங்கிய போது தலைப்புச் செய்தியானார்.

Avenue Supermarts Limited நிறுவனத்தில் இவருக்கு சொந்தமாக 2 சதவிகித பங்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதுவே அவரது பெரும் சொத்து மதிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.

கடந்த 2021-22 நிதியாண்டில் அவரது ஆண்டு சம்பளம் என்பது ரூ 4.5 கோடி என்றே தெரிய வந்துள்ளது. நவில் நோரோன்ஹாவின் தற்போதைய சொத்து மதிப்பு என்பது ரூ 6,500 கோடி என்றே கூறப்படுகிறது.