60 வயதில் 40 வயது தோழியை கரம் பிடித்தார் ஆஸ்திரேலிய பிரதமர்

0
99

காதலர் தினத்தன்று அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ், தனது நான்குவருடக கால தோழியுடன் திருமணபந்தத்தில் இணைந்துகொண்டுள்ளார்.

காதலர் தினத்தன்று தனது நான்குவருடகால தோழிக்கு விசேடமாக வடிவமைக்கப்பட்ட மோதிரத்தை வழங்கி தான் அவரை திருமணம் செய்ய விரும்புவதை தெரிவித்துள்ளார்.

அதேவேளை பதவியிலிருக்கும்போது திருமணபந்தத்தில் இணைந்துகொண்ட முதலாவது அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனிஅல்பெனிஸ் ஆவார். தனது விருப்பத்தை அவள் ஆம் என தெரிவித்தாள் என்ற பதிவுடன் இந்த விடயத்தை அவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

60 வயதில் 40 வயது தோழியை கரம்பிடித்தார் அவுஸ்திரேலிய பிரதமர் | First Australian Pm Marry While Office

அதோடு இந்த செய்தியை பகிர்ந்துகொள்வதுகுறித்து மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளோம் வாழ்க்கையின் ஏனைய பகுதி முழுவதும் ஒன்றாகயிருப்பது என தீர்மானித்துள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் ,

ஒருவரையொருவர் சந்திக்க முடிந்ததால்நாங்கள் அதிஸ்டசாலிகள் எனவும் அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவுஸ்திரேலிய நாடாளுமன்ற சகாக்களும் நியுசிலாந்து பிரதமர் உட்பட பலரும் வாழ்த்தியுள்ளனர். அதேவேளை அல்பெனிசிற்கு 60 வயது அவருடைய வாழ்க்கை துணையான ஹெய்டனிற்கு 40 வயது என்து குறிப்பிடத்தக்கது.