எலிசபெத் மகாராணியின் இறுதி சடங்கில் பங்கேற்ற ஜனாதிபதி: 17 மாதங்களின் பின் வெளியான விமான ரிக்கெட் விலை!

0
116

இலங்கைத் தீவு கடந்த 2022ஆம் ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தது. அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தவறான பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக நாடு முழுவதும் பாரிய போராட்டங்கள் வெடித்திருந்தன.

போராட்டங்களுக்கு முகங்கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் ஜனாதிபதி பதவியையும் துறக்கும் நிலை கோட்டாபய ராஜபக்சவுக்கு ஏற்பட்டது.

பிரித்தானியாவுக்கு உடனடி பயணம்

நாடாளுமன்ற பெரும்பான்மை ஊடாக ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க பொருளாதாரத்தை மறுசீரமைக்க பல்வேறு தீர்மானங்களை அமுல்படுத்தினார்.

2022ஆம் ஆண்டு ஜுலை 20ஆம் திகதி ரணில் விக்ரமசிங்க இலங்கைத் தீவின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட இரண்டு மாதங்களிலேயே பிரித்தானியாவுக்கு உடனடி பயணமொன்றை மேற்கொண்டிருந்தார்.

ரிக்கெட் செலவு தகவலை வழங்க மறுப்பு

எலிசபெத் மகாராணியின் இறுதி சடங்கில் பங்கேற்க 2022ஆம் ஆண்டு செப்டெம்பர் 17ஆம் திகதி ரணில் இந்த பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

இலங்கை தீவு அப்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்ததுடன் இத்தருணத்தில் ஜனாதிபதி வெளிநாடுகளுக்குத் தேவையற்ற பயணங்களை மேற்கொண்டு மக்களின் வரிப் பணத்தை செலவழிக்க வேண்டுமென என்ற கேள்விகளை எதிர்க்கட்சிகள் எழுப்பியிருந்தன.

இந்த நிலையில் ரணில் இந்தப் பயணத்தை மேற்கொள்ள விமான ரிக்கெட்டுக்காக செலவு செய்த நிதி பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர் ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி இது தொடர்பில் 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம் திகதி தகவல் கோரியிருந்த நிலையில் ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பான முக்கியத் தகவல் எனக் கூறி ஜனாதிபதி செயலகம் தகவல் கோரிக்கையை நிராகரித்திருந்தது.

14 நாட்களுக்குள் தகவல் வழங்க வேண்டும்

எவ்வாறாயினும் பல சந்தர்ப்பங்களில் நீண்ட மேல்முறையீட்டு விசாரணைகளின் மூலம் மேல்முறையீட்டு விசாரணைக்குப் பிறகு வழங்கப்பட்ட உத்தரவின்படி பயணம் தொடர்பான தகவல்களை நவம்பர் 30, 2023 அன்று வெளியிட ஆணையம் ஒப்புக்கொண்டது. அதன் பிரகாரம் வழங்கப்பட்ட தகவலில் 5.6 மில்லியன் ரூபாவை (ரூ. 5,696,140.00) செலவிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஊடகவியலாளர் ராகுல் சமந்த ஹெட்டியாராச்சியிடம் வினவியபோது, ​​”தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் கோரப்பட்ட 14 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட நிறுவனம் தகவல்களை வழங்க வேண்டும் என்றாலும் அதற்கான பதிலைப் பெற ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருந்தேன்.” என்றார்.