இலங்கை கிரிக்கெட் அணியில் யாரும் படைக்காத சாதனை படைத்த இளம் வீரர்!

0
224

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க ஒருநாள் போட்டிகளில் 200 ஓட்டங்களை பெற்ற முதல் இலங்கை வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரிய கடந்த 2000 ஆம் ஆண்டு சார்ஜாவில் இடம்பெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 189 ஓட்டங்களை பெற்றிருந்தமை அதிக ஓட்டங்கள் என்ற சாதனையாக இருந்தது.

இலங்கை கிரிக்கெட் அணியில் யாரும் படைக்காத சாதனையை படைத்த இளம் வீரர்! | Pathum Nissanka 200 Runs Odi Sri Lankan Cricket

இந்த நிலையில் சனத் ஜயசூரியவின் சாதனையை முறியடித்தது மட்டுமல்லாது 200 ஓட்டங்களை கடந்த முதலாவது இலங்கை அணி வீரர் என்ற இரட்டை சாதனையை பெத்தும் நிஸ்ஸங்க புரிந்துள்ளார்.

இன்றையதினம் பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியிலேயே பெத்தும் நிஸ்ஸங்க 200 ஓட்டங்களை பெற்று சாதனைப் படைத்துள்ளார்.