அவுஸ்திரேலிய புலம்பெயர் தமிழ் அமைப்புகளை சந்தித்த ரணில்: அரசியல் விடுதலைக்கான தீர்வு பேச்சுக்கே இடமில்லை

0
108

ஏழாவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவுஸ்திரேலியாவுக்கு பயணம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்குள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் சில பிரதிநிதிகளை சந்தித்து உரையாடியுள்ளார்.

இலங்கை தீவின் பொருளாதார நிலைமைகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகள் முதலீடு செய்வது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க உரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.

“நிரந்தரமான மற்றும் நிலையான இந்து சமுத்திரத்தை நோக்கி” என்ற தொனிப்பொருளில் உரையாற்றவுள்ள ஜனாதிபதி அவுஸ்திரேலிய வெளியுறவு துறை அமைச்சர் பென்னி வோங் (Penny Wong) ஆகியோர் உள்ளிட்ட முக்கிய பிரதிநிகளையும் சந்தித்தார்.

ஈழத் தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான தீர்வுகள் பற்றிய எந்தவொரு பேச்சு வார்த்தையும் இன்றி வெறுமனே பொருளாதர அபிவிருத்தி பற்றியே ரணில் விக்கிரமசிங்க பேசியதாக அவுஸ்திரேவியாவில் உள்ள புலம்பெயர் அமைப்புகள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த புலம்பயர் அமைப்புகளின் பிரதிநிதிகள் வடக்கு கிழக்கு தமிழர் தாயக பிரச்சினை தொடர்பாக சுட்டிக்காட்டிய போதும் அவர் அதனை கருத்தில் எடுக்கவிலலை என்றும் தெரிவிக்கப்டுபகின்றது.

நாடாளுமன்றத்தில் கொள்ளை விளக்க உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க பொருளாதர முன்னேற்றங்கள், அபிவிருத்திகள் பற்றி மாத்திரமே விளக்கமளித்திருந்தார். அரசியல் தீர்வு குறித்து எந்தவொரு விடயத்தையும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.