மலேசியாவின் புதிய மன்னர் பதவியேற்பு!

0
127

மலேசியாவின் முன்னாள் மன்னரான பகாங் ஆட்சியாளர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத்ஷாவின் பதவிக்காலம் நேற்று நிறைவு பெற்றது.

இந்நிலையில் நாட்டின் 17வது மன்னராக ஜோகூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் பொறுப்பேற்றுக் கொண்டார். கோலாலம்பூரில் உள்ள தேசிய அரண்மனையில் அவரது பதவியேற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.

மலேசியாவின் புதிய மன்னரின் கார் - விமானங்களின் வியப்பை ஏற்படுத்தும் எண்ணிக்கை! | 300 Cars Airplanes To Malaysia S New King

புதிய மன்னரான இப்ராஹிம் இஸ்கந்தருக்கு மலேசியாவை தவிர பிற இடங்களிலும் சொத்துக்கள் அதிகமாக உள்ளன. இவரிடம் 300 கார்கள் மற்றும் ஜெட் விமானங்கள் உள்ளன.  இதில் ஒரு கார் ஜெர்மனி சர்வாதிகாரியான ஹிட்லர் பரிசளித்தது. தனியாக ராணுவம் வைத்துள்ளார்.

மலேசியாவின் புதிய மன்னரின் கார் - விமானங்களின் வியப்பை ஏற்படுத்தும் எண்ணிக்கை! | 300 Cars Airplanes To Malaysia S New King

இவரது குடும்பமும் சிங்கப்பூரில் நிலம் மற்றும் பாமாயில், ரியல் எஸ்டேட் மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் முதலீடுகளை கொண்டிருக்கிறது. இதன் மதிப்பு ரூ.47 ஆயிரம் கோடி ஆகும்.

மன்னர் இப்ராஹிம் இஸ்கந்தர் கூறும்போது, நான் அரசாங்கத்தை ஆதரிப்பேன். ஆனால் அவர்கள் தவறாக ஏதாவது செய்கிறார்கள் என்று நினைத்தால் அது குறித்து எச்சரிப்பேன் என்றார்.