தொடரும் சுகாதார தொழிற்சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பு

0
118

நாடளாவிய ரீதியில் 72 சுகாதார தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பை இன்றைய தினமும் (02.02.2024) தொடர்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கப்பாடு எட்டப்படாததையடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

வைத்தியர்களுக்கு வழங்கப்படவுள்ள 35 000 ரூபாய் போக்குவரத்து கொடுப்பனவை தமக்கும் வழங்க வேண்டும் எனக் கோரி சுகாதார தொழிற்சங்கத்தினர் பணி பகிஷ்கரிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.

தொடரும் சுகாதார தொழிற்சங்கத்தினர் பணிபகிஷ்கரிப்பு | Continued Health Union Boycott

இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகில் இராணுவத்தினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கமைய நாடுமுழுவதிலும் உள்ள 22 வைத்தியசாலைகளில் 600 இற்கும் மேற்பட்ட இராவணுத்தினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த பணிப்புறக்கணிப்பு காரணமாக வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.

மேலும் எவ்வாறாயினும் அனைத்து சிறுவர் புற்றுநோய் மற்றும் சிறுநீரக வைத்தியசாலைகளின் சேவைகள் வழமைபோல் இடம்பெறும் என சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.