வாழைப்பழ தோலும்.. பொலிவான முகமும்..

0
106

பொதுவாகவே மலிவான விலையில் கிடைக்கக்கூடிய பழம் என்றால் அது வாழைப்பழம் என்று சொல்லலாம். வாழைப்பழம் எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய ஒன்று.

வாழைப்பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும், வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினையிலிருந்து விடுபடலாம். நாம் எல்லோரும் வாழைப்பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்து விடுவோம்.

ஆனால், நாம் தூக்கி எறியும் வாழைப்பழத்தின் தோலில் எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா? அதை தெரிந்து கொண்டால், இனி வாழைப்பழ தோலை ஒருபோதும் குப்பையில் போட மாட்டீர்கள்.வாழைப்பழ தோலில் இருக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

வாழைப்பழத் தோலின் பயன்கள்

இரவில் உறங்குவதற்கு முன்னர் வாழைப்பழத் தோலை முகத்தில் தடவி வந்தால், கரும்புள்ளிகள் மற்றும் மருக்கள் மறைவதுடன் மீண்டும் வராமல் இருக்கும்.

வாழைப்பழத்தோலில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிபினால்கள் நிறைந்து காணப்படுகின்றது. அவை உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுவதற்கு துணைப்புரிகின்றது.

வாழைப்பழத்தோலில் உள்ள பொட்டாசியம் சருமத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன் தழும்புகள் மற்றும் கறைகளை போக்குகின்றது.

வாழைப்பழத் தோல்களில் பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுகின்றது. அவை சருமத்தில் இருக்கும் நுண் துளைகளைத் திறந்து ஆக்ஸிஜனை உள்ளே செல்ல உதவுகின்றது.

முகத்தில் பருக்கள் அதிகமாக இருப்பவர்கள் வாழைப்பழத் தோலை பருக்கள் மீது தடவினால் முகம் உடனடி பொலிவு பெறும். இது முகத்தை சுத்தப்படுத்தவும். அழுக்குகளை குறைக்கவும் துணைப்புரிகின்றது.

இரவில் சரியான தூக்கம் இல்லாவிட்டால் கண்களை சுற்றி கருவளையம் காணப்படும். அதனை தவிர்க்க வாழைப்பழ தோலை கற்றாழை ஜெல்லுடன் சேர்த்து தடவி வந்தால் கருவளையம் விரைவில் மறைய ஆரம்பிக்கும்.

முகத்தில் அதிக சுருக்கங்கள் இருந்தால், இந்த வாழைப்பழ தோலை பயன்படுத்தலாம். இது ரத்த ஓட்டத்ததை சீர் செய்வதுடன் சுருக்கங்களை நீக்கும். வாழைப்பழ தோலில் சருமத்துக்கு ஈரப்பதமூட்டும் பண்புகள் அதிகமாக காணப்படுகின்றது.

இது சருமத்தில் கொலாஜனை உற்பத்தியை அதிகரிக்கிறது மற்றும் சருமத்தை இருக்கமாக்க உதவுகின்றது.

முகச்சுருக்கங்கள் நீங்கி என்றும் இளமையாக இருக்க விரும்புபவர்கள் வாழைப்பழ தோலை வாரம் இரண்டு முறை முகத்தில் தடவி மசாஜ் செய்துவந்தால் முகம் என்றும் இளமையான தோற்றத்துடன் இருக்கும்.