யாழ்.சுன்னாகம் பகுதியில் மதுபோதையில் தாயும், மகளும் நடுரோட்டில் செய்த காரியம்!(photos)

0
132

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் மதுபோதையில் நடு வீதியில் விழுந்து கிடந்த தாயும், மகளும் மீட்கப்பட்டுள்ள சம்பம் குறித்து விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தரோடை பகுதியில் உள்ள பௌத்த விகாரைக்கு அண்மையில் உள்ள இராணுவ முகாமுக்கு எதிராக இடம்பெற்றதாக கூறப்படும் நிலையில் சம்பவம் தொடர்பிலான  காணொளியும் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

உதவ சென்ற இளைஞர்கள் அதிர்ச்சி

வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 53 வயது தாயும், 29 வயது மகளுமே மதுபோதையில் விழுந்துள்ளனர்.

யாழில் நடுரோட்டில் மதுபோதையில் தாயும், மகளும் செய்த காரியம்; இரவில் நடந்த சம்பவம்! | Drunken Mother And Daughter Jaffna

நேற்று இரவு 7.30 மணியளவில் மோட்டார் சைக்கிளுடன் இரண்டு பெண்கள் வீதியில் விழுந்து கிடந்ததை அவதானித்த பிரதேச இளைஞர்கள், அவர்கள் நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என நினைத்து, உதவிக்கு விரைந்து சென்று, அவர்களிற்கு என்ன நடந்தது என விசாரித்த போதே, மது வாடை குப்பென வீசியுள்ளது.

இதனையடுத்து பெண்களிடம் பேச்சுக்கொடுத்தபோது, தாம் அந்த பகுதியிலுள்ள வட்டிக்கு பணம் கொடுக்கும் ஒருவரின் வீட்டிற்கு வந்ததாகவும், அவர் மதுபானம் பருக தந்ததாகவும் பெண்கள் தெரிவித்தனர்.

இளைஞர்களுடன் வாய்த்தகராறு

யாழில் நடுரோட்டில் மதுபோதையில் தாயும், மகளும் செய்த காரியம்; இரவில் நடந்த சம்பவம்! | Drunken Mother And Daughter Jaffna

அதோடு போதை உச்சத்தில் இருப்பதால் தம்மால் தொடர்ந்து பயணிக்க முடியவில்லை, தம்மை வீட்டுக்கு அனுப்பி வைக்குமாறு பெண்கள் இளைஞர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதையடுத்து அவர்களை இளைஞர்கள் காணொளி எடுக்க , மகள் அங்கிருந்து ஓடிச்சென்று, அருகிலுள்ள பற்றையொன்றுக்குள் மறைந்து இளைஞர்களுடன் வாய்த்தகராற்றில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவித்த நிலையில், போதையிலிருந்த மகள், மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு தப்பியோட தாயார் மட்டும் சிக்கிக் கொண்டார்.

இதனையடுத்து பொலிசார் தாயாரை சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று, எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

அதேவேளை யாழ்மாவட்டத்தில் போதைப்பொருளும் , சமூக சீரழிவுகள் தலைவிரித்தாடிவரும் நிலையில் , தாயும் மகளும் குடிபோதையில் ரோட்டில் வீழந்த சம்பவம் மக்களை எங்கு கொண்டு செல்லுமோ என்ற அச்சத்தை தோற்றுவித்துள்ளது.