இலங்கையை உலுக்கிய கொலை சம்பவம்; பொலிஸார் வெளியிட்ட தகவல்

0
136

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை நுழைவாயிலுக்கு அருகில் எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட ஐவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலான மேலதிக தகவல்கள வெக்லியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று திங்கட்கிழமை (22) காலை 8.30 முதல் 8.40 மணிக்குள் இந்தச் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பெலியத்த பொலிஸார் தெரிவித்தனர்.

ஆரம்பக் கட்ட விசாரணை

உயிரிழந்தவர்கள் வெள்ளை நிற டிபென்டரில் சென்று கொண்டிருந்த வேளை காலை உணவுக்காக டிபென்டர் நிறுத்தப்பட்டபோதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பச்சை நிற வாகனத்தில் வந்த சிலர் டிபென்டரில் சென்று கொண்டிருந்தவர்களை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் சமன் பெரேரா உட்பட நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் தங்காலை நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு ஒன்றுக்காக சென்று கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அதேவேளை உயிரிழந்த எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சமன் பெரேரா அம்பலாங்கொடையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றின் உரிமையாளராவார்.

மேலும் ரி-56 ரக துப்பாக்கியே இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.