மலேசியாவின் 400 மில்லியன் ஆண்டுகள் பழமையான முருகன் கோவில்: படிக்கட்டுகளுக்கு மாறாக Escalator அமைக்க திட்டம்

0
105

மலேசியாவின் மிகவும் பழைமையான வழிபாட்டுத்தலமான முருகன் ஆலயத்திற்கு செல்வதற்கு பயன்படுத்தப்படும் படிகளில் ஏறமுடியாத அல்லது என்ற விரும்பாத பக்தர்களுக்கு மாற்று நடவடிக்கையாக நகரும் படிக்கட்டை (Escalator) அமைப்பதற்கு ஆலய அறங்காவலர்கள் திட்டமிட்டுள்ளனர்.

பத்துமலை என்பது மலேசியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக திகழ்கின்றது. இந்துக்களின் மத ஸ்தலமான இங்கு ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகுவிமர்சியாக கொண்டாடப்படுகிறது.

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து வடக்கே சில மைல் தொலைவில் அமைந்துள்ள இந்த வழிபாட்டுத்தலம் சுமார் 400 மில்லியன் ஆண்டுகள் பழமையானது மலையில் அமைந்துள்ளது. 272 படிகளை கடந்தே பத்துமலை உச்சியில் சுண்ணாம்புக் குகையில் அமைந்துள்ள ஆலயத்தை பக்தர்கள் அடையவேண்டும்.

இந்த நிலையிலே, படிகளில் ஏறமுடியாத மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் கோயிலுக்கு செல்லும் வகையில் நகரும் படிக்கட்டை அமைப்பதற்கு ஆலய நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு அரசாங்கம் உதவும் என கோயில் நிர்வாகம் நம்பிக்கை கொண்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறும் தைப்பூசத் திருவிழாவின் பின்னர் நகரும் படிக்கட்டு மற்றும் பல்நோக்கு மண்டபம் என்பவற்றின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்நோக்கு மண்டபம் அமைப்பதற்கு 7.5 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், நகரும் படிக்கான செலவு குறித்து இதுவரை மதிப்பீடு செய்யப்படவில்லை என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.