ரஜினியின் லால் சலாம் படத்துடன் மோதும் படங்கள்

0
143

பொங்கலையொட்டி வெளியாகும் என்று கூறப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லால் சலாம் பெப்ரவரி 9ம் திகதிக்கு தள்ளிப் போயுள்ளது.

ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் மொய்தீன் பாய் என்ற கேமியோ கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் வெளியிட்டு பணிகள் துரிதமாக நடந்துவரும் நிலையில், லால் சலாம் படத்துடன் ஒரே நாளில் வெளியாகும் படங்கள் பற்றிய தகவல் கிடைத்துள்ளது.

Oruvan

லவ்வர்

லால் சலாம் படத்துடன் நடிகரும் இயக்குநருமான மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள லவ்வர் படம் பெப்ரவரி 9ம் திகதி மோதவுள்ளது.

படத்தில் மணிகண்டனுடன் ஸ்ரீகௌரி பிரியா, கண்ணா ரவி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். முன்னதாக மணிகண்டன் நடிப்பில் வெளியான குட்நைட் படம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்ற நிலையில் லவ்வர் படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

படத்தை பிரபுராம் வியாஸ் இயக்கியுள்ள நிலையில் இந்தப் படமும் மணிகண்டனுக்கு சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Oruvan

சைரன்

இந்த படங்களின் வரிசையில் ஜெயம் ரவியின் சைரன் படமும் இணைந்துள்ளது. இந்தப் படமும் பெப்ரவரி 9ம் திகதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஜெயம்ரவியுடன் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ளனர். ஆண்டனி பாக்கியராஜ் படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளதும் கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. பெப்ரவரி 9ம் திகதிக்கு இன்னும் இரு வாரங்கள் உள்ள நிலையில், இந்த போட்டியில் வேறு எந்த தமிழ் படமாவது இணையுமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.