பாகிஸ்தான் நடிகையை மணந்தார் கிரிக்கெட் வீரர் ஷோயிப் மாலிக்: வைரலாகும் புகைப்படம்

0
126

பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் சோயிப் மாலிக் அந்நாட்டை சேர்ந்த நடிகை சனா ஜாவேதை திருமணம் செய்து கொண்டதாக இன்று அறிவித்துள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் ஆல்ரவுண்டரான சோயிப் மாலிக், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சனாவுடனான திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதேபோல் சனா ஜாவேதும் தனது சமூக வலைதளத்தில் இந்தத் திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இத்திருமண அறிவிப்பு மூலமாக டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா – சோயிப் மாலிக் ஜோடி விவாகரத்து செய்திருப்பது உறுதியாகியுள்ளது.

சானியா மிர்சா – சோயிப் மாலிக் திருமணம் கடந்த 2010ம் ஆண்டு இஸ்லாமிய மதப்படி ஐதராபாத்தில் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Oruvan
Oruvan