4 மணித்தியாலங்கள் மட்டுமே உறங்கும் பிரான்ஸின் புதிய பிரதமர்

0
151

பிரான்ஸின் புதிய பிரதமர் கேப்ரியல் அத்தால் நாள் ஒன்றில் நான்கு மணிநேரங்கள் மட்டுமே உறங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமரின் உடலநலத்தை கண்காணிக்கும் வல்லுனர்கள் இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிரான்சின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கேப்ரியல் அத்தால் பிரான்சின் இளம் பிரதமர் ஆவார். நாட்டில் நிலவும் பல்வேறு இயற்கை அனர்த்தம் மற்றும் பல்வேறு காரணங்களுக்கான தொடர்ச்சியாக கடமையாற்றி வருகிறார். இரவு பகலாக பல பகுதிகளுக்கு பயணிப்பதும் பல சந்திப்புக்க்களில் ஈடுபடுவதுமாக அவரது பயணம் தொடர்கிறது.

இந்நிலையில் அவர் நாள் ஒன்றுக்கு நான்கு மணிநேரம் மாத்திரமே உறங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த போதிய உறக்கமின்மை பாரிய உடல் ஆபத்தினை கொண்டுவரும் என மருத்துவர் Dr. Jonathan Taieb எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் போதிய உறக்கமின்மை 50 வயதில் பாரிய நோய்த் தாக்கங்களைக் கொண்டுவரும் எனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.