போருக்கு மத்தியில் இஸ்ரேலுக்கு படையெடுக்கும் இந்திய மக்கள்..

0
167

வேலையின்மை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஆயிரக்கணக்கான இந்திய மக்கள் போருக்கு மத்தியில் இஸ்ரேலுக்கு செல்லத் துணிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலில் ஐந்து மடங்கு வருவாய்

இந்தியாவின் ஹரியானா மாகாணத்தில் இஸ்ரேலுக்கான ஆட்சேர்ப்பு முகாம் ஒன்றில், ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர். மேசன்கள், பெயிண்டர்கள், எலக்ட்ரீஷியன்கள், பிளம்பர்கள் மற்றும் சில விவசாயிகள் இஸ்ரேலில் வேலைக்கு செல்ல தயாராக இருப்பதாகவும், சிலர் போர் பகுதிக்குச் செல்லும் அபாயத்திற்கும் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் வேலையின்மை அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், தற்போதைய சூழலில் இந்தியாவில் கிடைப்பதைவிட இஸ்ரேலில் ஐந்து மடங்கு வருவாய் ஈட்ட முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Lekharam என்பவர் தெரிவிக்கையில், ஆட்சியாளர்கள் வேலைவாய்ப்பை உருவாக்குவதை விட்டுவிட்டு, அரசியல் ஆதாயம் தேடிக்கொள்ளும் நடவடிக்கைகளில் மட்டுமே கவனம் செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

மரணம் எங்கிருந்தாலும் வரும் என தெரிவித்துள்ள அவர், இஸ்ரேலுக்கு சென்று உழைத்து கொஞ்ச நாள் செலவிட்ட பின்னர் திரும்ப வேண்டும் என்றார். 1.4 பில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் நகர்ப்புற வேலையின்மை விகிதம் 6.6 சதவிகிதம் என அரசாங்க தரவுகள் தெரிவித்தாலும், 29 வயதுக்கும் குறைவான வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை 17 சதவிகிதம் இருப்பதாக கூறப்படுகிறது.வேலையின்மை... போருக்கு மத்தியில் இஸ்ரேலுக்கு படையெடுக்கும் ஆசிய நாடொன்றின் மக்கள் | Indian Workers Queue Up To Get Job In Israel

40,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள்

இதனிடையே, இந்திய வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், கடந்த ஆண்டு போர் அபாயம் ஏற்படும் முன்பு இஸ்ரேலுடன் தொழிலாளர் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது என்றார்.

இதனால், வேலை வாய்ப்பு தேடி இஸ்ரேல் செல்லும் இந்தியர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இஸ்ரேலில் தொழிலாளர் சட்டங்கள் மிகவும் கடுமையானவை மற்றும் வலுவானவை, வெளிநாட்டில் உள்ள எங்கள் மக்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கான எங்கள் பொறுப்பை நாங்கள் மிகவும் உணர்ந்துள்ளோம் என்றார்.

இதனிடையே, ஜனவரி மாதத்தில் மட்டும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 70,000 தொழிலாளர்களை அனுமதிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்டுமான வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும், அக்டோபர் 7 தாக்குதலுக்கு பிறகு அந்த துறை ஸ்தம்பித்துள்ளதாகவும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக செவிலியர் மற்றும் கட்டுமானத் துறைகளில் 40,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பணியாற்ற அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் இஸ்ரேலும் இந்தியாவும் கடந்த ஆண்டு கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.