இலங்கை vs ஜிம்பாப்வே 3வது T20 இறுதிப் போட்டி இன்று: வெற்றியை உறுதி செய்யுமா இலங்கை?

0
146

இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபத்திற்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. கொழும்பு ஆர் பிரேமதாச விளையாட்டரங்கில் இரவு 7 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இன்றைய போட்டியில் இலங்கை அணியில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் முதல் இரண்டு போட்டிகளில் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. இந்த நிலையில் இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் போட்டியின் வெற்றியை தீர்மானிப்பதாக அமைகின்றது.