ராமர் பஜனை பாடி பக்தியில் மூழ்கிய பிரதமர் மோடி: சமூக வலைதளங்களை ஆக்கிரமித்த காணொளி

0
171

ஆந்திர மாநிலம் லொபக்ஷியில் அமைந்துள்ள வீரபத்திரர் ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை (16) பிரார்த்தனை வழிபாடுகளில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ராமர் பஜனை பாடி பக்தியில் மூழ்கியிருந்தார்.

ஜனவரி 16, 17 ஆம் திகதிகளில் ஆந்திரா மற்றும் கேரளாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்ட மோடி பாரம்பரிய உடை அணிந்து இன்று பாரம்பரிய உடை அணிந்து வழிபட்டதுடன் பஜனை பாடியும் மகிழ்ந்துள்ளார்.

இந்த காணொளி தற்சமயம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது. இராமாணயத்தில் இந்த ஆலயம் முக்கியத்துவம் வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாக விளங்குறது.

இராமாணயத்தில் சீதையைக் கடத்திச் செல்லுகையில் தடுக்க முயன்ற ஜடாயுவின் இறக்கைகளை வெட்டி வீழ்த்துகிறார் இராவணன். ஜடாயு இந்தக் கிராமத்தில் வீழ சீதையைத் தேடி வருகிற ராமன் ஜடாயுவை இங்கே கண்டு “எழு பறவையே” (தெலுங்கில் “லெ பக்ஷி”) எனக் கூற அதுவே கிராமத்தின் பெயராயிற்று என்கிறது இராமயணத்தின் கிளைக் கதை ஆகும்.