செயற்கை சூரியனை உருவாக்கி அசத்திய கிராமம்: இந்த சூரியன் மறையவே மறையாது

0
152

இத்தாலி நாட்டிலுள்ள விக்னெல்லா எனும் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மறையாத செயற்கை சூரியனை கண்டுபிடித்துள்ளனர். விக்னெல்லா கிராமத்தில் நவம்பர் 11 முதல் பெப்ரவரி 2 வரையில் சூரிய ஒளி மிகவும் குறைவாகவே இருக்குமாம். இதனால் விக்னெல்லா கிராமத்தில் இருக்கும்பொழுது ஏதோ அன்டார்டிகாவில் இருப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுமாம்.

இந்த கிராமத்தில் பல நூற்றாண்டுகளாகவே சூரியன் மறைந்து இரண்டரை மாதங்களுக்குப் பிறகுதான் மறுபடி தோன்றுமாம். இந்த பிரச்சினையை தீர்க்கும் விதமாகவே அக் கிராமத்து மக்கள் இந்த செயற்கை சூரியனை நிர்மாணித்துள்ளனர்.

Oruvan

2005ஆம் ஆண்டு 1 கோடி ரூபாய் திரட்டப்பட்டு, ஊருக்கு எதிரில் உள்ள மலையில் பிரம்மாண்ட கண்ணாடி அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

பின் 2006 நவம்பரில் மலையின் மீது 40 சதுர மீட்டரும் 1.1 டன் எடையும் கொண்ட கண்ணாடியை 1100 மீட்டர் உயரத்தில் நிறுவினர்.

Oruvan

குறைவான சூரிய ஒளியானது உயரமான இடத்தில் உள்ள கண்ணாடி மீது படும்போது அது ஒளியை எதிரொலிக்கும். இதன்படி 2006 ஆம் ஆண்டு விக்னெல்லா கிராமம் முழுமையான சூரிய ஒளியை பெற ஆரம்பித்தது. கிராம மக்களின் இந்த செயற்திட்டம் அனைவரும் பாராட்டும் வகையில் அமைந்துள்ளது.

Oruvan
Oruvan