புளூ ஸ்டார் படத்தின் ட்ரைலர் வெளியானது: அசோக் செல்வனுக்கு ஜோடியான கீர்த்தி பாண்டியன்

0
142

புளூ ஸ்டார் படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார். இயக்குநர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘புளூ ஸ்டார்’ படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.