‘மலையக தியாகிகள் தினம்’: நாளை கொட்டகலையில் அனுஷ்டிப்பு

0
152

மலையக மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக போராடி உயிர் துறந்தவர்களை நினைவு கூறும் வகையாக நாளைய தினம் மலையக தியாகிகள் தினம் கொட்டகலை கொமர்சல் லேக்கில் பிற்பகல் 03.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

“எமது உரிமைக்காக இன்னுயிரை தியாகம் செய்த மலையக தியாகிகளை நினைவுகூறுவோம்“ எனும் தானிப்பொருளின் கீழ் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வினை பிடிதளராதே அமைப்பு ஏற்பாடு செய்துள்ளதோடு தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த அனைவரையும் குறித்த அமைப்பினர் அழைத்துள்ளனர்.

Oruvan

இந்நிகழ்வு தொடர்பில் பிடிதளராதே அமைப்பு தெரிவித்துள்ளதாவது,

இந்த தினம் தொழிலாளர் உரிமைக்காக அகிம்சை ரீதியில் போராடி மடிந்தவர்களுக்கானது எனவும் அவர்கள் தனிநாடு கேட்டு போராடியவர்கள் என்ற நிலைக்கு கொண்டு சென்று விடாதீர்கள்.

ஒரு சமூகத்தின் வரலாறு என்பது அந்த சமூகத்தின் உரிமைக்காக அல்லது நேசித்தவர்கள் என்ற அடிப்படையிலேயே கௌரவம் வழங்கப்படுகின்றது.

இதனடிப்படையில்,

* 1940இல் முல்லோயா தோட்டப் போராட்டத்தில் உயிர் துறந்த கோவிந்தன்.

* 1942இல் புப்பரஸ்ஸ கந்தலா தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த வேலாயுதம், வீரசாமி.

*1950 மார்ச் 02 ஆம் திகதி டெவன் தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த வைத்திலிங்கம்.

*1953 இல் என்சாவெல தெபுவான தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த எட்லின்நோனா.

*1953 நவம்பரில் கல்தோணி தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த பீ. வெள்ளையன்.

*1956 இல் மஸ்கெலியா நல்லதண்ணி தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த காருமலை.

*1956 மே 08 ஆம் திகதி டயகம தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த அப்புஹாமி ஆப்ரஹாம் சிங்கோ.

*1957 ஜூலை 15 ஆம் திகதி உடபுஸ்ஸலாவை எனிக் தோட்டத்தில் உயிர் நீத்த பொன்னையன், கொம்பாடி ஆகியோர்

*1958 இல் இரத்தினபுரி ஹேய்ஸ் தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த நடேசன்.

*1958 மார்ச் 30ஆம் திகதி பொகவந்தலாவை போரட்டத்தி உயிரி நீத்த பிரான்சீஸ் மற்றும் ஜய்யாவு ஆகியோர்.

*எட்டியாந்தொட்ட வெற்றிலையூர் பம்பேசும தோட்டத்தில் உயிர் நீத்த நித்தமாமுண்டு.

*1960 இல் மாத்தளை மாதென தோட்டத்தில் உயிர் நீத்த முத்துசாமி.

*1960 இல் ரக்வானை மூக்களாந்சேனை தோட்டத்தில் உயிர் தங்வேலு.

*1960 இல் நிட்டம்புவ மல்வான தோட்டப் போராட்டத்தில் உயிர் சிதம்பரம்.

*1961 நவம்பரில் நாவலப்பிட்டி மொண்டிசிரஸ்டோ (லெட்சுமி தோட்டம்) ஆராயி, நடேசன், செல்லையா, மாரியப்பன் ஆகியோர்.

*1964 மே 28 ஆம் திகதி மாத்தளை கந்துநுவர தோட்ப் போராட்டத்தில் உயிர் துறந்த அழகர், ரெங்கசாமி ஆகியோர்.

*1967 நவம்பர் 08 ஆம் திகதி மடுல்கெல சின்ன கிளாப்போக்கு தோட்டப் போராட்டத்தில் உயிர் துறந்த சோனை.

*1968 ஒக்டோபர் 27 ஆம் திகதி இரத்தினபுரி மயிலிட்டியா தோட்டப் போராட்டத்தில் உயிர் துறந்த சின்னப்பன், அந்தோனிசாமி

*1970 இல் செப்டெம்பரில் பதுளை சீனாகெல தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த அழகர்சாமி, ராமையா

*1970 இல் டிசம்பர் 31 ஆம் திகதி மாத்தளை கருங்காலி தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த பார்வதி, கந்தையா, ஆறுமுகம், ராமசாமி ஆகியோர்

*1977 மே 11ஆம் திகதி தலவாக்கலை டெவன் தோட்ட போராட்டத்தில் உயிர் நீத்த சிவனு லட்சுமணன் மற்றும்

*கண்டி பள்ளேகல தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த பழனி வேல் ஆகியோரை விசேட விதமாக கௌரவிக்க எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.