வடசென்னை 2 வருமா, வராதா.. மேடையில் தனுஷ் கூறிய பதில்!

0
114

நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் பட ப்ரீ ரிலீஸ் விழா இன்று சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடந்தது. அதில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் வந்திருந்தது. தான் முதல் படத்தில் இருந்து இத்தனை வருடங்களாக சிறுக சிறுக சேர்த்த கூட்டம் இது என தனுஷ் கூறி இருக்கிறார்.

கேப்டன் மில்லர் படத்தை தான் பார்த்துவிட்டதாகவும், ‘சிறப்பாக இருக்கிறது, கண்டிப்பா சம்பவம் பண்ணும்’ எனவும் கூறி இயக்குனர் அருண் மாதேஸ்வரனை அவர் பாராட்டி இருக்கிறார்.

வடசென்னை 2

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த வட சென்னையின் இரண்டாம் பாகம் எப்போது என ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அது பற்றி இன்றைய விழாவில் பேசிய தனுஷ், ‘வடசென்னை 2 நிச்சயம் உருவாகும். அதை எப்படி மிஸ் செய்வேன். அதற்கு சிறிது காலமும், சரியான நேரமும் அமைய வேண்டும். சரியான நேரத்தில் அது நடக்கும்’ என தனுஷ் கூறி இருக்கிறார்.