நாளை வெளியாகவுள்ள யாத்ரா -2 திரைப்படத்தின் டிரைலர்

0
118

‘யாத்ரா -2’ திரைப்படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஆந்திர முதலமைச்சரும் ஒய்.எஸ்.ஆரின் மகனுமான ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடித்திருக்கின்றார்.

இப்படம் பெப்ரவரி 8ம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ‘யாத்ரா -2’ திரைப்படத்தின் ட்ரைலர் நாளை காலை 11.00 மணிக்கு வெளியாகவுள்ளதாக புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு நடிகர் மம்முட்டி தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.