ஸ்பெயின் கால்பந்து வீராங்கனைக்கு முத்தமிட்ட வழக்கு: தீவிரமடையும் விசாரணை!

0
162

ஆஸ்திரேலியாவில் கடந்த 2023 ஒகஸ்ட் 20 அன்று நடைபெற்ற உலக கோப்பை பெண்கள் கால்பந்து தொடரின் இறுதி போட்டியில் ஸ்பெயின் 1-0 எனும் கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிப்பெற்றது.

உலக கிண்ணத்தை வென்ற மகிழ்ச்சியில் பரிசு பெறும் நிகழ்ச்சியில் ஸ்பெயின் வீராங்கனைகள் பங்கேற்ற போது ஸ்பெயின் கால்பந்து விளையாட்டு சங்க தலைவர் லூயிஸ் ரூபியாலஸ் Luis Rubiales ஜென்னி ஹெர்மோசோ Jenni Hermoso எனும் வீராங்கனையை கட்டியணைத்து முத்தமிட்டுள்ளார். வீராங்கனையிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ரூபியாலஸின் நடவடிக்கை பெரிதும் விமர்சிக்கப்பட்டது.

ஸ்பெயின் கால்பந்து வீராங்கனைக்கு முத்தமிட்ட வழக்கு: தீவிரமடையும் விசாரணை! | Kissing Case Spanish Football Player Jenni Hermoso

இதையடுத்து, “நான் நடந்து கொண்ட விதம் தவறுதான். அதை ஒப்பு கொள்கிறேன். ஆனால் அதிகபட்ச மகிழ்ச்சியில் எந்த உள்நோக்கமும் இல்லாமல் அவ்வாறு நடந்து கொண்டேன்” என ரூபியாலஸ் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராக எழுந்த கண்டனங்களால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பெரும் சர்ச்சையை உண்டாக்கிய இந்நிகழ்வு தொடர்ப்பில் ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட் (Madrid) நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஸ்பெயின் கால்பந்து வீராங்கனைக்கு முத்தமிட்ட வழக்கு: தீவிரமடையும் விசாரணை! | Kissing Case Spanish Football Player Jenni Hermoso

மேலும் “எனக்கு ரூபியாலஸ் நடந்து கொண்ட விதம் பிடிக்கவில்லை” என ஹெர்மோசோ அப்போது கருத்து தெரிவித்துள்ளார். இதில் ஹெர்மோசோ தனது கருத்துக்களை பதிவு செய்தார். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் அவரிடம் விசாரணை நடைபெற்றது.

“என் சம்மதத்துடன் அந்த நிகழ்வு நடைபெறவில்லை. நான் எதிர்பாராத நேரத்தில் ரூபியாலஸ் அவ்வாறு நடந்து கொண்டார்” என ஹெர்மோசோ விசாரணையில் தெரிவித்தார். 

ஸ்பெயின் கால்பந்து வீராங்கனைக்கு முத்தமிட்ட வழக்கு: தீவிரமடையும் விசாரணை! | Kissing Case Spanish Football Player Jenni Hermoso

பரிசு வழங்கும் நிகழ்ச்சியின் போது அங்கிருந்த கண்காணிப்பு கமரா காணொளிகளை நீதிமன்றம் ஆய்வு செய்து வருகிறது. ஸ்பெயின் சட்டப்படி ஒருவரின் சம்மதமில்லாமல் அவருக்கு முத்தமிடுவது பாலியல் குற்றமாக கருதப்படும்.

எனவே, இப்போது நடைபெறும் விசாரணை முடிவில்தான் இந்த வழக்கில் ஸ்பெயின் கால்பந்து விளையாட்டு சங்க தலைவர் லூயிஸ் ரூபியாலஸ் பாலியல் குற்றம் புரிந்தவராக விசாரிக்கப்படுவாரா என தெரியவரும்.