மறைந்த நடிகர் விஜயகாந்த் வீட்டிற்கு நேரில் சென்று ஜீவன் தொண்டமான் அஞ்சலி

0
181

இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் இன்று (02.01.2024) நேரில் தேமுதிக தலைமை கழகத்தில் கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அத்துடன் சாலிகிராமத்தில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்று கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

ஈழத்தமிழர்கள் மீது பெரும் அன்பு

மறைந்த நடிகர் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்திய ஜீவன் தொண்டமான் | Jeevan Thondaman Visited Vijayakanth House Tribute

உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவரும் பிரபல தமிழ் நடிகருமான விஜயகாந்த் கடந்த 28 ஆம் திகதி உடல்நல குறைவால் உயிரிழந்திருந்தார்.

விஜய்காந்த் ஈழத்தமிழர்கள் மீது பெரும் அன்பு கொண்டவர் ஆவார். ஈழத்தமிழ் மக்கள் கவலையில் இருக்க தான் தனது பிறந்தநாளை கூட கொண்டாடமாட்டேன் என இருந்த ஒப்பற்ற நடிகராவார். இந்நிலையில் அவரது மறைவு தமிழக மக்களை மட்டுமல்லாது இலங்கைத் தமிழர்களையும் வேதனை கொள்ளச் செய்திருந்தது.