பட்டையை கிளப்பும் ‘தளபதி 68’ பர்ஸ்ட் லுக்

0
145

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தளபதி 68’ படத்தில் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

‘தளபதி 68’ பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது பர்ஸ்ட் லுக் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தளபதி இரசிகர்களுக்கு 2024 ஆம் ஆண்டு ‘தளபதி 68’ புத்தாண்டு சரவெடிதான்

Oruvan