நடிகை அழகு மணியை ஞாபகம் இருக்கா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

0
157

தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகர்கள் வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பிரபலமாக இருக்கும் காமெடி நடிகர்கள் என்றால் அது கவுண்டமணி செந்தில் தான். இவர்கள் இருவர் காம்போவில் ஏகப்பட்ட காமெடி காட்சிகள் உள்ளன.

இன்றும் பலர் ரசித்து பார்க்கும் அளவிற்கு நகைச்சுவை நிறைந்த காமெடி காட்சிகள் உள்ளன. அதிலும் குறிப்பாக மகுடம் படத்தில் செந்தில் தனது தங்கை அழகுமணி என்று கூறி நடிகை போட்டோவை காட்டி கவுண்டமணியை ஏமாற்றி திருமணம் செய்து வைக்கும் காட்சி தற்போது வரை மிகவும் பிரபலம்.

அந்த காட்சியில் நடித்த செந்திலின் தங்கை அழகுமணியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. ஏனெனில் அந்த அளவிற்கு அந்த காமெடி சீன் பிரபலம். இந்நிலையில் அந்த நடிகையின் தற்போதைய புகைப்படம் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

அந்த நடிகையின் உண்மையான பெயரே அழகுமணி தான். தற்போது 49 வயதாகும் அழகுமணி ஆசிரியராக பணிபுரிந்து விட்டு வீட்டில் குடும்பத்தை கவனித்த வருகிறாராம். படத்தில் கருப்பாக குண்டாக இருந்த அழகுமணி நேரில் கலராகவும் அழகாகவும் இருக்கிறார்.

அவரை கண்ட ரசிகர்கள் பலரும் இவரா அந்த அழகுமணி? பெயருக்கு ஏற்றாற்போல் அழகாக தான் இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.