திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்து டிசம்பரில் உயிரிழந்த பிரபலங்கள்!

0
151

தமிழ் திரையுலகில் அசைக்கமுடியாத நட்சத்திரங்களாக இருந்து அரசியல் களத்தில் தலைவர்களாக இருந்து டிசம்பர் மாதத்தில் உயிரிழந்த முன்று முக்கிய அரசியல்வாதிகள் யார் யார் என்பதை பார்க்கலாம்.

எம்.ஜி ராமச்சந்திரன்

திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்து டிசம்பரில் உயிரிழந்த முக்கியஸ்தர்கள்! | December Month Mgr Jayalalithaa Vijayakath Death

பழம்பெரும் நடிகரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி ராமச்சந்திரன் அவர்கள் ஒரு நாடக நடிகராக இருந்து திரைத்துறையில் நுழைந்தவர். அவரின் அசுரத்தனமான நடிப்பால் மக்கள் மனதில் நீங்க இடம்பிடித்தார்.

பின்னர் அரசியலுக்கு வந்து ஏராளமான நன்மைகளை மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்தவர். மூன்று முறை முதலமைச்சராக இருந்த நிலையில் 1984ம் ஆண்டு சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

ஜெ. ஜெயலலிதா

திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்து டிசம்பரில் உயிரிழந்த முக்கியஸ்தர்கள்! | December Month Mgr Jayalalithaa Vijayakath Death

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஜெ.ஜெயலலிதா திரையுலகம் இதுவரையில் காணாத பல்துறை நடிகையாக விளங்கினார். பின்னர் அரசியலில் எம்.ஜி ஆர்க்கு பிறகு அதிமுக கட்சியின் தலைவராகவும் 6 முறை முதலமைச்சராகவும் இருந்து மக்களுக்கு பயன்படும் வகையில் பல நல்ல நல திட்டங்களை செயல்படுத்தினார். வீர மங்கையாக விளங்கிய ஜெயலலிதா உடல்நல குறைவால் பல நாட்கள் போராடி வந்த நிலையில் டிசம்பர் 5ம் திகதி 2016ம் ஆண்டு காலமானார்.  

கேப்டன் விஜயகாந்த்

திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்து டிசம்பரில் உயிரிழந்த முக்கியஸ்தர்கள்! | December Month Mgr Jayalalithaa Vijayakath Death

சினிமா மீது இருந்த மோகத்தால் மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து நடிகராக ஜெயித்துவர் தான் நடிகர் விஜயகாந்த். இவர் ஒரே ஆண்டில் 18 படங்கள் நடித்தது இன்றுவரை திரையுலகில் பேசப்பட்டு வருகின்றது.

மக்களை ஒரு தலைவனாக இருந்து வழிநடத்த வேண்டும் என்பதற்காக தேமுதிக என்ற தனிக்கட்சி ஒன்றை துவங்கினார். 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 29 தொகுதிகளில் வென்று எதிர்க்கட்சி தலைவரானார். 

இதன்படி, சினிமாவிலும் அரசியலிலும் தனது தனித்துவத்தை வெளிப்படுத்திய விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ம் திகதி உடல்நல குறைவால் காலமானார்.