‘அகல் விளக்கில்’ தொடங்கிய சகாப்தம் விடைபெறுகிறது: பொதுமக்களுக்கு இறுதி சடங்கில் அனுமதி இல்லை

0
161

கண்ணீர் அஞ்சலி செலுத்தும் பொதுமக்கள்

ஈழத்து தமிழர் விடுதலைப் போரை தீரமுடன் நேசித்து “கேப்டன் பிரபாகரனாக” கொண்டாடப்பட்ட மக்களின் தலைவன் மண்ணில் இருந்து விடை பெறுகிற தருணம் நெருங்கியுள்ளது. பொதுமக்கள் மறைந்த நடிகர் விஜயகாந்த்திற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Oruvan

பொது மக்களுக்கு அனுமதி இல்லை

விஜயகாந்த் இறுதி சடங்கில் 200 பேர் பங்கேற்க மட்டுமே அனுமதி. பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி ஊர்வலம் ஆரம்பம்

சென்னை தீவுத் திடலில் இருந்து கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகம் நோக்கி விஜயகாந்த் உடல் இறுதி ஊர்வலம் புறப்படுகிறது.

Oruvan

கமல்ஹாசன் இறுதி அஞ்சலி

விஜயகாந்த் உடலுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Oruvan

நடிகர் ரஜினிகாந்த் கண்ணீர் அஞ்சலி

நடிகர் ரஜினிகாந்த் விஜயகாந்த் உடலுக்கு கலங்கியப்படி நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

நடிகர் விஜய் அஞ்சலி

தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் வந்து தனது அஞ்சலியை செலுத்தி கலங்கியபடி நின்றார்.

Oruvan

இசைஞானி இளையராஜா அஞ்சலி

விஜயகாந்த் படங்களுக்கு அதிகமாக பாடல்கள் அமைத்துள்ள இசைஞானி இளையராஜா அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

Oruvan