என்னென்ன பிரச்சனையால் பாதிக்கப்பட்டார் விஜயகாந்த்- அவரது கடைசி நிமிடங்கள்

0
175

கேப்டன் விஜயகாந்த்
ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் வியந்து பார்க்க வைத்த ஒரு மனிதர் கேப்டன் விஜயகாந்த்.

சினிமாவில் இவர் செய்யாத நல்ல விஷயங்களே கிடையாது, ஒரே ஓரு உதாரணம் ஒட்டுமொத்த சினிமா பிரபலங்களை திரட்டி நடிகர் சங்க கடனை அடைக்க அவர் செய்த விஷயம் தான்.

சினிமாவிலேயே மக்களுக்கு உதவிய விஜயகாந்த் அரசியலுக்கு வந்த பிறகும் உதவி வந்தார். அவரது வீட்டிற்கு சென்ற யாரும் பசியோடு திரும்பியதாக சரித்திரமே இல்லை. அப்படிபட்ட ஒரு நல்ல மனிதரை இன்று நாம் இழந்திருக்கிறோம்.

காலை முதல் அவரது ரசிகர்கள், தொண்டர்கள் வீட்டின் முன் நின்று கதறி அழுதுக்கொண்டிருக்கிறார்கள்.

நோய்கள்
விஜயகாந்த் அவர்கள் உடல்நலக் குறைவு ஏற்பட்டதில் இருந்து வீட்டிலேயே முடங்கிவிட்டார்.

அவருக்கு நீரழிபு நோயால் கால் விரல்களுக்கு ரத்த ஓட்டம் பாயாமல் இருந்ததால் வலது கால் விரல்களில் சிலவற்றை கடந்த 2022ம் ஆண்டு அகற்றியுள்ளனர். தைராய்டு பிரச்சனையால் அவரது பேச்சு பாதிக்கப்பட்டது.

சிறுநீரக பிரச்சனை, முதுகுதண்டு வடத்திலும் பிரச்சனை, தைராய்டு சேர்ந்து இருப்பதால் கழுத்தில் இணைந்திருக்கும் தண்டுவடத்தின் நரம்பு பாதிக்கப்பட்டு அவருக்கு ஞாபக மறதி இருந்து வந்தது.

கடந்த டிசம்பர் 18ம் தேதி காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்.

சில தினங்களுக்குள் மீண்டும் அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் வென்டிலேட்டர் சுவாசம் கொடுக்கப்பட நுரையீரல் அலர்ஜி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.