கண் அறுவை சிகிச்சையின் போது தாக்கப்பட்ட நோயாளி: வைத்தியர் பணி நீக்கம்!

0
175

கண் அறுவை சிகிச்சையின் போது வயதான நோயாளியை தலையில் தாக்கிய வைத்தியரை பணியிடை நீக்கம் செய்ய குறித்த வைத்தியசாலையின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் கடந்த 2019 அம் ஆண்டு சீனாவின் குய்காங்’ல் உள்ள வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் பதிவாகி 3 ஆண்டுகளுக்கு பின்னர் வைத்தியசாலையில் உள்ள கண்காணிப்பு கமராவில் பதிவாகிய காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவ தொடங்கியதையடுத்து, குறித்த நடவடிக்கையுடன் தொடர்புடைய வைத்தியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் கண் அறுவை சிகிச்சைக்காக 80 வயதான முதியவர் ஒருவர் சீனாவின் குய்காங்’ல் உள்ள வைத்தியசாலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, அறுவை சிசிச்சைக்காக நோயாளியின் குறிப்பிட்ட ஓரிடத்தை மட்டும் மரத்துப் போகச் செய்வதற்கான மயக்க மருந்தை வைத்தியர் செலுத்தியுள்ளார்.

எனினும் முழுமையாக மயக்கம் வராத நிலையில் அறுவை சிகிச்சையின் போது நோயாளி புலம்பியுள்ளார். கோபமடைந்த வைத்தியர் இதன் போது வைத்தியரால் வழங்கப்பட்ட எச்சரிக்கைகளை நோயாளி புரிந்து கொள்ளாத காரணத்தால் அவர் கோபமடைந்துள்ளார்.

கண் அறுவை சிகிச்சையின் போது தாக்கப்பட்ட நோயாளி : வைத்தியர் பணி நீக்கம் | Pati Assaulted During Eye Surgery Doctor Dismissed

இதனை தொடர்ந்து குறித்த வைத்தியர் நோயளியை மூன்று முறை தலையில் தாக்கியுள்ளார். இவை அனைத்தும் வைத்தியசாலையில் உள்ள கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி இந்த நிலையில் கமராவில் பதிவாகிய காட்சிகளை மற்றுமொரு மருத்துவர் தனது சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.

இதனிடையே அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளி உள்ளூர் மொழியில் பேசியதாகவும் வைத்தியரின் எச்சரிக்கையை அவரால் புரிந்து கொள்ள முடியாது போனதாகவும் சம்பவத்துடன் தொடர்புடைய வைத்தியசாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த வைத்தியர் நோயாளியை கடுமையாகக் கையாண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏய்ர் சீனாவின் உத்தரவு இந்த பின்னணியில், நோயாளி தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் சம்பந்தப்பட்ட வைத்தியசாலையின் தாய் நிறுவனமான ஏய்ர் சீனா (Aier China), குறித்த வைத்தியரை பணி இடை நீக்கியதோடு, வைத்தியசாலையின் தலைமை நிர்வாக அதிகாரியை பணி நீக்கம் செய்தும் உத்தரவிட்டுள்ளது

அத்துடன் சம்மந்தப்பட்ட முதிய நோயாளியிடம் மன்னிப்பு கோரியுள்ள மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு 500 யுவான் நிவாரணமாகவும் வழங்கியுள்ளது.