விஜய்யின் 68வது படக்குழுவில் முக்கிய பிரபலம் உயிரிழப்பு- சோகத்துடன் பிரபலம் போட்ட டுவிட்

0
145

லியோ படத்தை முடித்த கையோடு விஜய் தனது 68வது படத்தின் வேலைகளை தொடங்கிவிட்டார்.

மே 2023, இப்படத்தின் அறிவிப்பு வெளியானது, பின் அக்டோபர் மாதம் படத்திற்கான போட்டோ ஷுட் தொடங்கியிருக்கிறது.

வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தில் விஜய், பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாட்டி சௌத்ரி, மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு, விடிவி கணேஷ், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய், ரம்யா கிருஷ்ணன் என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடிக்கிறார்கள்.

சென்னை, தாய்லாந்து, ஹைதராபாத் என மாறி மாறி படப்பிடிப்புகள் நடந்து வருகிறது.

சோகமான செய்தி
இந்த நிலையில் தளபதி 68 படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தனது டுவிட்டரில் ஒரு சோகமான பதிவை போட்டுள்ளார். அதில் தயாரிப்பு குழுமம் AGS நிறுவனத்தில் ஒருவரான ஜாய்சன் என்பவர் உயிரிழந்துள்ளாராம்.

இந்த தகவலை வெங்கட் பிரபு கடும் சோகத்துடன் பகிர்ந்துள்ளார்.