2014ல் காணாமல் போன MH370 விமானத்தைக் கண்டுபிடிக்க புதிய முயற்சி!

0
142

கோலாலம்பூரில் இருந்து மலேசியா நோக்கி பயணத்தை ஆரம்பித்த எம்.எச்.370 என்ற விமானம் கடந்த 2014 ஆண்டு மார்ச் 8-ம் திகதி ரேடார்களில் இருந்து காணாமல் போனது.

ரேடார்களிலிருந்து மாயமான எம்.எச். 370 விமானம் எங்கு சென்றது, அதில் இருந்தவர்கள் நிலை என்ன என்ற கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை. ஒரே மர்மமாக இருந்து வருகின்றது.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக காணாமல் போயிருக்கும் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் 370-ஐ கண்டுபிடிக்க புது திட்டம் உள்ளதாக ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.

2014ல் காணாமல் போன MH370 விமானத்தை கண்டுபிடிக்க புதிய முயற்சி! | New Idea To Find Missing Flight Mh370 In 2014

லண்டனில் உள்ள ராயல் ஏரோனாடிக்கல் சொசைட்டியில் நடைபெற்ற விரிவுரையில் புதிய வகை தேடலின் மூலம் பத்து நாட்களில் காணாமல் போன விமானத்தை கண்டுபிடிக்க முடியும் என்று வான்வெளி துறை நிபுணர்கள் ஜீன்-லுக் மார்சண்ட் மற்றும் விமானியான பேட்ரிக் பெல்லி தெரிவித்தனர்.

“நாங்கள் முறையான திட்டமிடல்களை மேற்கொண்டுள்ளோம். எங்களிடம் திட்டம் உள்ளது.. இந்த பகுதி மிகவும் சிறியது, புதிய வகை வழிமுறைகளை கையாளும் போது 10 நாட்கள் ஆகலாம்.  

ஆனால், இது விரைவில் நிறைவுபெறும் வகையில் இருக்கும். எம்.எச். 370 பாகங்கள் கண்டுபிடிக்கும் வரை, அதற்கு என்ன ஆனது என்பது யாருக்கும் தெரியாது,” என ஜீன்-லுக் மார்சண்ட் தெரிவித்தார். 

2014ல் காணாமல் போன MH370 விமானத்தை கண்டுபிடிக்க புதிய முயற்சி! | New Idea To Find Missing Flight Mh370 In 2014