கனடாவின் முதல் இந்திய – கனேடிய மருத்துவர் மரணம்: Order of British Columbia பட்டத்தை பெற்றவர் மருத்துவர் கில்

0
130

இந்தியாவில் பிறந்த முதல் கனடா நாட்டவரான மருத்துவர் குர்தேவ் சிங் கில் தனது 92வது வயதில் காலமானார். அவரது மரணம் குறித்து குடும்பத்தார் விடுத்த அறிக்கையில், கனடா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் உள்ள மக்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கில் மறைந்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1931 இல் ஹரியானா மாநிலத்தின் கரோடி கிராமத்தில் பிறந்த கில், 1949 இல் வட அமெரிக்காவிற்கு படகில் வந்தார், பின்னர் கனடாவுக்கு வந்த கில் 1954 இல் கனேடிய குடியுரிமை பெற்றார்.

Oruvan

40 ஆண்டுகள் கனடாவில் மருத்துவராக பணியாற்றிய அவர் கனடாவின் முதல் இந்திய – கனேடிய மருத்துவர் ஆவார். கில் கடந்த 1991ல் Order of British Columbia என்ற கெளரவ பட்டத்தை பெற்றார். இந்த விருதை பெற்ற இந்தியாவில் பிறந்த முதல் கனடியர் என்ற பெருமையைப் பெற்றவர் கில் என்பது குறிப்பிடத்தக்கது.