கண்டியில் பிறந்த மாபெரும் தலைவன்; தமிழ்நாட்டு மக்களின் இதயக்கனி…! எம்.ஜி.ஆரின் நினைவுநாள்

0
158

அ.தி.மு.க. நிறுவனத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 36வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மக்கள் மத்தியில் ஒரு சிலர் தான் எப்போதும் நினைவில் நிற்பார்கள். அந்த வகையில், எளிமை, கண்ணியம், நேர்மை என சகல பண்புகளையும் கொண்டு மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு என்றும் அமர்ந்திருப்பவர் எம்ஜிஆர்.

இலங்கையின் கண்டியில் பிறந்த எம்ஜிஆருக்கு பொன்மனச் செம்மல், புரட்சி தலைவர், மக்கள் திலகம், ஏழை பங்காளன் என பல பட்ட பெயர்கள் உண்டு.

Oruvan

அவர் உயிருடன் இருந்தவரை திமுக தலைவராக இருந்த கருணாநிதியால் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க முடியவில்லை என்பது வரலாறு.

தமிழ்நாட்டிற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ள எம்ஜிஆர் ஏழை எளியோருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.

அதனால் தான் நடித்த திரைப்படங்களில் தனது குணநலனுக்கு ஏற்பவே கதாபாத்திரங்களை தேர்வு செய்தார். அதோடு சாதாரண மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு ஆதரவாக எம்ஜிஆர் பேசும் வசனங்கள் இன்றைய சூழலுக்கும் பொருந்துவதாக இருக்கும்.

அனைத்து தரப்பு மக்களின் வேடங்களையும் படத்தில் ஏற்று அவர் நடித்ததால் அவர் தங்களில் ஒருவர் என்ற எண்ணத்தை எளிய மக்களிடம் ஏற்படுத்தியது. இதுவே அவர் பின்னாளில் அரசியலில் உச்சம் தொட உதவியாக அமைந்தது.

Oruvan