இயக்குநர் அட்லீயின் அடுத்த பட ஹீரோ இவர் தான்: விஜய், ஷாருக்கான் இல்லை

0
164

ராஜா ராணி, தெறி, மெர்சல் என தொடர் வெற்றி படங்களை கொடுத்தவர் அட்லீ. இவர் இயக்கத்தில் இந்தியாவின் முன்னணி நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் அண்மையில் வெளியான ஜவான் திரைப்படமும் பெரிய வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து விஜய்யை வைத்து அட்லீ அடுத்த படத்தை இயக்குவார் என்றும் ஷாருக்கான் மற்றும் விஜய்யை இணைத்து ஒரு படத்தை இயக்குவார் எனவும் தகவல்கள் வெளியாகின.

Oruvan

இந்த நிலையில் பலரும் எதிர்பார்க்காத வகையில் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை தான் அட்லீ அடுத்ததாக இயக்கவுள்ளதாக அண்மைய தகவல்கள் கூறுகின்றன.

அட்லீ மற்றும் அல்லு அர்ஜுன் இணையும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், அனிருத் இசையமைப்பாளர் எனவும் கூறப்படுகிறது.

Oruvan