எட்டு வருட காத்திருப்பு: சர்வதேச போட்டிகளில் முதல் சதம் அடித்த சஞ்சு சாம்சன்

0
105

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் சஞ்சு சாம்சன் தனது முதல் சர்வதேச சதத்தை அடித்தார்.

தனது 16வது ஒருநாள் போட்டிகளில் விளையாடும் சஞ்சு சாம்சன் தனது முதல் சதத்தை பதிவுசெய்துள்ளார். இதன் மூலம் அவரது நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது.

சஞ்சு சாம்சன் தான் எதிர்கொண்ட முதல் 20 பந்துகளில் வெறும் 10 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டார். இதனையடுத்து தனது அசத்தலான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார்.

திலக் வர்மாவுடன் சாம்சன் நான்காவது விக்கெட்டுக்கு 116 ஓட்டங்களை குவித்தார். கடைசி பத்து ஓவர்களில் இந்தியாவுக்கு ஒரு திடமான தளத்தை அமைத்தார்.

இறுதியில் 44வது ஓவரில் அவர் தனது சதத்தை பூர்த்தி செய்தார். பல ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வரும் சாம்சன் நீண்ட நாட்களாக தேசிய அணியில் இடம் கிடைக்காமல் போராடி வந்தார்.

இந்நிலையில் இன்றையப் போட்டியில் சதம் அடித்துள்ளார். அவர் 114 பந்துகளில் 108 ஓட்டங்களை குவித்தார். இந்திய அணி ஐம்பது ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 296 ஓட்டங்களை குவித்தது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 56.7 சராசரியில் 510 ஓட்டங்களை குவித்துள்ள சாம்சன் மூன்று அரைச்சதம் மற்றும் ஒரு சதத்தினை அடித்துள்ளார்.

இந்நிலையில் சதம் அடித்த சாம்சனுக்கு சமூக வலைதளங்களில் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் ஆய்வாரள்கள் என பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.