ரவீனாவை திட்டி தீர்த்த பெண்: உடைந்து போன காதல் ஜோடி! பரபரப்பு ப்ரோமோ

0
128

பிக் பாஸ் வீட்டிற்கு வந்த ரவீணாவின் பெண் கோபத்தில் திட்டி தீர்க்கும் ப்ரோமோ வெளியாகி நிகழ்ச்சி மீதான எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துள்ளது. பிக் பாஸ் 7 வீட்டில் இருக்கும் ரவீணா தாஹாவும், மணி சந்திராவும் காதலர்கள் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டிற்கு ரவீணாவின் பெண் வந்திருக்கிறார். வந்த உடன் மகளை தனியாக அழைத்துச் சென்று தன் கோபத்தை காட்டியுள்ளார்.

உன்னை அறைஞ்சிருப்பேன் நான். உண்மையிலேயே எனக்கு அவ்வளவு கோபம் வந்தது. அம்மா எல்லாத்துக்கும் ஒத்துக்கிட்டாங்களா? எல்லாத்துக்கிட்டயும் அம்மா ஒத்துக்கிட்டாங்க, ஒத்துக்கிட்டாங்கனு சொல்லிக்கிட்டு இருக்க என பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த கையோடு ரவீணாவை பதம் பார்த்துள்ளார்.

அவருக்காக விளையாட நீங்க இங்கே வரவில்லை. இது நமக்கு தேவையில்லை என பெண் சொன்னதை கேட்டு ரவீணாவின் முகமே வாடிவிட்டது.

பெண் பேசி முடித்த பிறகு தூரமாக நின்று மணியை பார்த்து நீ காலி மகனே என்பது போன்று சைகை செய்ய அவருக்கு ஒரே பயமாகிவிட்டது.

ரவீணாவிடம் பேசிய கையோடு மணி சந்திராவை தனியாக அழைத்து அவருக்கும் அறிவுரை கூறியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் உருவாகும் காதல் முறிவது பெரிய விஷயம் இல்லை என்பது போன்றாகிவிட்டது. இந்நிலையில் வெளியே உருவான காதல் பிக் பாஸ் வீட்டில் முறிந்துவிடும் போலயே என்று பேச்சு கிளம்பியிருக்கிறது.