இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 100 பேர் இடைநீக்கம்: பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நிகழ்வு

0
148

இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 100 பேர் பாராளுமன்ற அமர்வில் பங்குபற்றுவதில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பாதுகாப்பு அத்துமீறல் சம்பவம் குறித்து அரசாங்கம் அறிக்கை வெளியிட வேண்டும் என்று தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து பல வருடங்களுக்கு பின்னர் ஒரே அமர்வில் அதிகமானோர் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருசிலர் டிசம்பர் 21ஆம் திகதி வரையில் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.

இந்திய பாராளுமன்றத்தின் மக்களவையில் கடந்த 13 ஆம் திகதியன்று இனந்தெரியாத நபர்கள் வண்ண புகை குண்டுகளை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து அமளியில் பலர் ஈடுபட்டனர்.

இதனால் அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டதாக தெரிவித்து கனிமொழி, மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன், சுப்பராயன், ஸ்ரீகந்தன் உள்ளிட்ட 9 எம்.பி.க்கள் கூட்டத் தொடரில் பங்கேற்க இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இவர்களுக்கு நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைக்கால தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஜோதிமணி எம்.பி. உள்ளிட்ட ஐந்து பேர் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் மேலும் 10 பேர் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் 100 பேருக்கும் அதிகமானோர் தற்காலிக நீக்கப்பட்டுள்ளனர்.