விசித்ராவிடம் மன்னிப்பு கேட்ட பூர்ணிமாவின் தாய்: அதிர விட்ட ப்ரோமோ

0
133

பூர்ணிமாவின் அம்மா, விசித்ராவிடம் சென்று தன்னுடைய மகள் செய்த தவறுகளுக்காக மன்னித்து விடுங்கள் என்று கூறும் காட்சிகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இதைப்பார்த்து பூர்ணிமா அதிர்ச்சியடைவதாகவும் காட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து பூர்ணிமாவின் தாயார் போட்டியாளர்களுடன் இணைந்து ஆட்டம் போட்ட காட்சிகளையும் பார்க்க முடிந்தது.

இந்த நிகழ்ச்சியின் துவக்க போட்டியாளர்களாக பூர்ணிமா, விக்ரம் உள்ளிட்டவர்கள் இணைந்திருந்த நிலையில் அவர்கள் தங்களது பெற்றோரை பார்த்தபோது மிகவும் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டதை பார்க்க முடிந்தது. மேலும் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட்டில் விசித்ரா, விக்ரம் மற்றும் ரவீனா ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில் இவர்களில் யார் வெளியேறுவார்கள் டபுள் எவிக்ஷன் இருக்குமா என்றெல்லாம் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் சூழலில் பிரீஸ் டாஸ்க் ஆரம்பிக்கப்பட்டு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.