இலங்கையின் அழகை வெளிப்படுத்திய Nas Daily யூடியூப் தளம்: சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் திட்டம்

0
114

மில்லியன் கணக்கான இரசிகர்களைக் கொண்ட Nas Daily யூடியூப் தளமானது இலங்கையின் அழகை வெளிப்படுத்தும் வகையில் காணொளியொன்றை வெளியிட்டுள்ளது.

Nuseir Yassin எனும் வலைப்பதிவாளரினால் உலகளாவிய ரீதியில் மிகவும் அழகான தீவு என்ற அடிப்படையில் இந்த காணொளி உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டுள்ள Nuseir Yassin, இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக காணொளியை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காணொளியை சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட Nuseir Yassin, மிகவும் அழகான இரயில் பயணம், மிகவும் அழகான இயற்கை மிகவும் அழகான மனிதர்களைக் கொண்ட உலகில் பிடித்தமான நாடுகளில் இலங்கையும் ஒன்று எனக் குடிப்பிட்டுள்ளார். குறித்த காணொளி வெளியிடப்பட்டு சுமார் 15 மணி நேரத்தில் 60 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.

இதனிடையே, இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் Nas Daily யூடியூப் தளமானது மூன்று விசேட காணொளிகளை வெளியிட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.