தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா: தோல்விக்கு பதிலடி கொடுக்க நினைக்கும் தென் ஆப்பிரிக்கா

0
122

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் 1 – 1 என்ற கணக்கில் சமனானது.

இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. இதில் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த நிலையில் இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கெபேஹா நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு நடக்கிறது.

Oruvan

இதிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இந்திய அணி முனைப்புக் காட்டும். அதே நேரம் தென்னாப்பிரிக்க அணி, முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை வெல்லும் வாய்ப்பில் நீடிக்க வரிந்து கட்டும்.

அணி விபரங்கள்

இந்தியா: ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், ரஜத் படிதார், திலக் வர்மா, லோகேஷ் ராகுல் (கேப்டன்), சஞ்சு சாம்சன், அக்ஷர் பட்டேல், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், குல்தீப் யாதவ், முகேஷ் குமார்.

தென்னாப்பிரிக்கா: ரீஜா ஹென்ரிக்ஸ், டோனி டி ஜோர்ஜி, வான்டெர் டஸன், மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், பெலுக்வாயோ, வியான் முல்டெர், நன்ரே பர்கர், கேஷவ் மகராஜ், தப்ரைஸ் ஷம்சி.