19 வயதுக்கான ஆசிய கிண்ணத்தை வென்ற பங்களாதேஷ் கிரிக்கெட் அணி!

0
140

2023 ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பங்களாதேஷ் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்றைய தினம் (17-12-2023) டுபாயில் இடம்பெற்றுள்ளது.

இந்த போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 195 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பங்களாதேஷ் அணி கிண்ணத்தை வென்றுள்ளது.

19 வயதுக்கான ஆசிய கிண்ணத்தை வென்ற பங்களாதேஷ் கிரிக்கெட் அணி! | Bangladesh Won The U19 Asian Cricket Cup

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 282 ஓட்டங்களைப் பெற்றது.

பங்களாதேஷ் அணி சார்பாக அஷிகுர் ரஹ்மான் ஷிப்லி, 149 பந்துகளில் 1 சிக்ஸர் மற்றும் 12 பவுண்டரிகளுடன் 129 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி சார்பாக அய்மன் அகமது 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியால் 24 ஓவர்கள் 5 பந்துகளில் 87 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் ரோஹனத் டவுல்லா போர்சன் மற்றும் மருஃப் மிருதா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

19 வயதுக்கான ஆசிய கிண்ணத்தை வென்ற பங்களாதேஷ் கிரிக்கெட் அணி! | Bangladesh Won The U19 Asian Cricket Cup