வெறுப்பு பிரசாரப் பாடல்களைப் பாடி நடனம்; இஸ்ரேலுக்குத் தலைவலியாகும் இஸ்ரேல் ராணுவ வீரர்களின் களியாட்டம்!

0
145

முடிவுக்கு வராது மூன்றாவது மாதமாகத் இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடர்ந்து வரும் நிலையில் சமீபத்தில் வெளியாகியுள்ள இஸ்ரேல் வீரர்களின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த விடியோவில் இஸ்ரேலிய வீரர்கள் காஸாவில் உள்ள பொம்மை கடை ஒன்றைத் தகர்ப்பதும் பொம்மைகளின் தலையைத் துண்டிப்பதும் கைவிடப்பட்ட உணவு மற்றும் குடிநீர் டிரக்கை தீயிட்டு கொளுத்துவதுமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

வெறுப்பு பிரசாரப் பாடல்களைப் பாடி நடனம்; இஸ்ரேலுக்குத் தலைவலியாகும் ராணுவ வீரர்களின் களியாட்டம்! | Extravagance Of Soldiers Headache For Israel

வெறுப்பு பிரசாரப் பாடல்களைப் பாடி நடனம்

வெறுப்பு பிரசாரப் பாடல்களைப் பாடி இஸ்ரேல் வீரர்கள் வட்டமாக நடனமிடுவது போலான விடியோக்கள் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் வீரர்கள் இவ்வாறு பொருத்தமில்லாது தீங்கிழைக்கும் வகையில் நடந்து கொள்வது இது முதல் முறை இல்லை.

எனினும் சமீபத்திய விடியோக்கள் தேசத்தின் ஒட்டுமொத்த மனநிலையைக் காண்பிப்பதாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து இஸ்ரேலிய மனித உரிமைகள் செயல்பாட்டாளர் டிரார் சடோட், “மனிதநேயமற்ற தன்மை தலைவர்களிடம் இருந்து வீரர்களுக்குக் கடத்தப்பட்டுள்ளது” என்கிறார்.

வெறுப்பு பிரசாரப் பாடல்களைப் பாடி நடனம்; இஸ்ரேலுக்குத் தலைவலியாகும் ராணுவ வீரர்களின் களியாட்டம்! | Extravagance Of Soldiers Headache For Israel

ஒரு இஸ்ரேல் வீரர் காஸாவின் வீட்டிற்குள் நுழைந்து அலமாரிகளில் உள்ள உள்ளாடைகளைப் படமெடுக்கிற விடியோ ஒன்றும் மற்றொரு வீரர் இஸ்லாமியர்களின் வழிபாட்டுக்கான விரிப்புகளைக் கழிவறையில் தூக்கி வீசுகிற விடியோவும் வெளியாகியுள்ளது.

சர்வதேச அளவில் இஸ்ரேலின் போர் நெறிகள் குறித்து கடுமையான எதிர்ப்புகள் எழுந்து வருகின்றது. இந்த நிலையில் பல்வேறு விமர்சங்கள் முன்வைக்கபப்டும் நிலையில் இஸ்ரேல் வீரர்கள் இவ்வாறு நடந்து கொள்வது இஸ்ரேலுக்கு தலைவலியை உருவாக்கியுள்ளதாகக் கருதப்படுகிறது.

அதேவேளை இந்த நிகழ்வுகள் இஸ்ரேல் பாதுகாப்பு அமைப்பின் நெறிகளுக்குப் பொருந்தாது. ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.