லோகேஷ் கனகராஜ் வழங்கும் முதல் படம்: ‘ஏ’ சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு

0
270

லோகேஷ் கனகராஜ் வழங்கும் முதல் படமான ‘பைட் கிளப்’ திரைப்படத்திற்கு தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கத்தில் ‘உறியடி’ விஜய்குமார் கதாநாயகனாக பைட் கிளப் திரைப்படத்தில் நடித்திருக்கின்றார்.

ரீல்ஸ் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘ஜி ஸ்குவாட்’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார்.

இப்படத்தின் போஸ்டர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இது குறித்து படக்குழு போஸ்டருடன் வெளியிட்ட அறிவிப்பு ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.