AI தொழில்நுட்பம்; இலங்கை அம்புலன்சில் புதிய முறைமை அறிமுகம்!

0
156

AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவரை ஒருங்கிணைக்கும் நாட்டின் முதல் அம்புலன்ஸ் சேவையாக 1990 Suwa Sariya இலங்கையின் இலவச அம்புலன்ஸ் சேவை மாறியுள்ளது.

முன்னதாக இந்த ஒருங்கிணைப்பு தொலைபேசியில் செய்யப்பட்டது. ‘இணைக்கப்பட்ட அம்புலன்ஸ்’ உயிர்களைக் காப்பாற்றும் சுவா சரியாவின் பணியை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

AI தொழில்நுட்பம்; இலங்கை அம்புலன்சில் புதிய முறைமை அறிமுகம்! | Ai Technology New System In Sri Lanka Ambulance

இந்நிலையில் இலவச அம்புலன்ஸ் சேவையின் முன்னோடியான பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா சமீபத்திய அபிவிருத்தியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றியபோது ​​இந்த தொழில்நுட்ப சாதனையை சாத்தியமாக்கிய Wavenet மற்றும் Microsoft நிறுவனங்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

AI தொழில்நுட்பம்; இலங்கை அம்புலன்சில் புதிய முறைமை அறிமுகம்! | Ai Technology New System In Sri Lanka Ambulance

சுவா சரியாவின் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு முதலில் கொழும்பு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் முன்னோடி திட்டமாக ஆரம்பிக்கப்படும் எனவும் அதன் பின்னர் நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தப்படும் எனவும் அவர்  தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன, சுவா சரிய ஊழியர்களுக்கு வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவாக ரூ. 10,000 வழங்குவதாக வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.